ஜகத்குரு ஶ்ரீ ஸத்ய சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர்களின் 27வது ஜயந்தி

ஸநாதன வைதிக (ஹிந்து) தர்மத்தைக் காக்கவே ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர்கள் 2500+ வருடங்களுக்கு முன் தமது மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடமாக ஶ்ரீ காஞ்சீ காமகோடி ஆசார்ய பீடத்தை நிறுவினார்.

அந்த தர்மத்தில் நமது விஶ்வாஸத்தை வ்ருத்தி செய்து புண்யமெனும் வஸுவை (செல்வத்தை) நமக்குக் கொடுக்க ஜகத்குரு ஶ்ரீ ஸத்ய சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் கடந்த விஶ்வாவஸு ௵ இந்த பீடத்தின் உத்தராதிகாரியாக ஸந்ந்யாஸம் மேற்கொண்டுள்ளார்.

உலக வாழ்க்கையில் இருக்கும் நம்மை வழிநடத்த தமது உலக வாழ்க்கையைத் துறந்து நிஷ்டையுடன் பகவான் ஸாம்ப சந்த்ரமௌலீஶ்வரரை பூஜித்து வருகிறார்கள் இளைய ஶ்ரீசரணர்கள்.

அன்னாரது ஜயந்தி நன்னாளான இன்று வந்தனம் செலுத்தி அன்னார் சிறந்த ஆயுள் ஆரோக்யத்துடன் இருந்து நம் எல்லோருக்கும் வெகு காலம் அருள் செய்ய வேண்டும் என்று ப்ரார்த்திப்போம்.

🙏 ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர! 🙏

Jagadguru Shri Satya Chandrashekharendra Sarasvati Shricharana’s 27th Jayanti

Shri Shankara Bhagavatpada established the Shri Kanchi Kamakoti Acharya Peetam as His Moolamnaya Sarvajna Peetam 2500+ years ago to preserve the Sanatana Vaidika (Hindu) Dharma.

Last Vishvavasu year, to develop our vishvasa in that dharma and give us the vasu (wealth) of punya, Jagadguru Shri Satya Chandrashekharendra Sarasvati Shankaracharya Swamigal has taken up sannyasa as the uttaradhikari of this Peetam.

To guide us who are living in the worldly life, the young Shricharana has renounced His own worldly life and is performing puja to Bhagavan Samba Chandramaulishvara with dedication.

On the auspicious day of His Jayanti, submitting our prostrations, let us pray that He should live long and healthy, and bless us all for a long time.

🙏 Jaya Jaya Shankara! Hara Hara Shankara! 🙏