பீஷ்ம தர்ப்பணம்

தர்ம ஸ்வரூபியான பீஷ்ம பிதாமஹர் “வாழ்நாள் முழுவதும் ப்ரஹ்மசர்ய வ்ரதத்தை கடைபிடிப்பேன்” என்று ப்ரதிஜ்ஞை செய்து ப்ரஹ்மசாரியாகவே வாழ்ந்தார். ஆகவே அவருக்கு ஸந்ததி இல்லாமல் போனது. ஆனால் அவர் மஹாபாரதம் ஶாந்தி பர்வ மற்றும் அனுஶாஸந பர்வத்தில் போதித்துள்ள விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முதலிய பற்பல தர்மங்களால் நாம் ஶ்ரேயஸ்ஸை அடைகிறோம்.

ஆகையால் நாம் அனைவரும் மாக ஶுக்ல அஷ்டமியன்று பீஷ்மரின் பொருட்டு தர்ப்பணம் மற்றும் அர்க்ய தானத்தைச் செய்ய வேண்டும். (இதில் தகப்பனார் ஜீவித்திருப்பவர்களும் அடங்குவர்.) அது அனந்த புண்யத்தையும் கொடுத்து ஸம்வத்ஸரம் முழுவதும் செய்த பாபங்களை போக்குகிறது.

இந்த புண்ய தினத்தில் நாம் எல்லோரும் நமது காமகோடி ஆசார்யர்கள் காட்டும் வழியின்படி அவ்வாறே அனுஷ்டித்து பீஷ்ம பிதாமஹரின் அனுக்ரஹத்தைப் பெறுவோமாக! இதற்கான அனுஷ்டான க்ரமம் பல லிபிகளில் வெளியிடப்படுகிறது.

🙏 ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர! 🙏

Bhishma Tarpanam

Bhishma Pitamaha whose was Dharma Svarupi made a vow that he would observe brahmacharya vrata throughout His life and lived as a brahmachari only. Hence He did not have any descendants. However all of us attain shreyas by the very many dharma-s like Vishnu Sahasranama taught by Him in the Mahabharata Shanti Parva and Anushasana Parva-s.

Therefore, on Magha Shukla Ashtami all of us should perform tarpanam and arghya danam unto Bhishma. (This includes those whose father is alive.) It bestows endless punya and destroys all papa-s accumulated during the last year.

On this auspicious day, let us all do anushthanam accordingly in the path shown by our Kamakoti Acharyas, and obtain the anugraha of Bhishma Pitamaha! The procedure for this is published in multiple scripts.

🙏 Jaya Jaya Shankara! Hara Hara Shankara! 🙏