ஸூர்ய பூஜை
ஸூர்ய பகவான் பலவேறு சிறப்பு தருணங்களில் வழிபடப்படுகிறார்:
- ஆகாயத்தில் அவரது வருடாந்தர ஸஞ்சாரத்தின் முக்கியமான புள்ளிகளான ஸங்க்ரமணங்கள்,
- ரத ஸப்தமி முதலிய வ்ரதங்கள்,
- பானு ஸப்தமி (ஞாயிறன்று ஸப்தமி) பாதா₁ர்க்கம் (ஞாயிறன்று வ்யதீபாதம்) போன்ற அபூர்வமான யோகங்கள்
… முதலியவை. பெரும்பாலான இந்த தருணங்கள் தானம், தர்ப்பணம் முதலியவற்றுக்கும் மிக புண்யமானவை.
ஸங்க்ரமணங்களில், மகர ஸங்க்ராந்திக்கு சுமார் 24 நாட்கள் முன்பு வரும் உத்தராயண ஆரம்பம் மிக புண்யமானது. அதே போல் கர்க்கட ஸங்க்ராந்திக்கு 24 நாட்கள் முன்பு தக்ஷிணாயன ஆரம்பம்.
பொதுவான கொண்டாடப்படும் மகர ஸங்க்ராந்திக்கு முன்பு உத்தராயண புண்ய காலத்தன்றும் நமது ஜகத்குரு ஸ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடாதிபதி ஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஸூர்ய பூஜையை ஸம்ப்ரதாயமாக அனுஷ்டிக்கிறார்.
இத்தகைய உயர்ந்த புண்ய தினங்களில் ஸூர்ய பகவானைப் பூஜித்து, தர்ம கார்யங்களில் ஈடுபட்டு, குருவருளுக்கும் திருவருளுக்கும் பாத்திரமாகி உய்வோமாக. இதற்கான லகுவான பூஜா பத்ததி பல லிபிகளில் வெளியிடப்படுகிறது.
குறிப்பு: வரவிருக்கும் தக்ஷிணாயன புண்ய காலம் மும்மடங்கு சிறப்பானது ஏனெனில் அன்று பானு ஸப்தமியும் பாதா₁ர்க்கமும் ஆகும். இந்த மிக அபூர்வமான புண்ய காலத்தை நாம் கண்டிப்பாக நல்லபடியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
🙏 ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர! 🙏
Surya Puja
Surya Bhagavan is worshipped on various special occasions:
- sankramana-s which are important points during his annual movement in the sky,
- vrata-s like Ratha Saptami
- rare yoga-s like Bhanu Saptami (Saptami on Sunday) Patarka (Vyatipata on Sunday)
… etc. Most of these occasions are also auspicious for performing danam, tarpanam etc.
Of the sankramana-s, the start of Uttarayana which is about 24 days before Makara Sankranti is most auspicious. Likewise the start of Dakshinayana is about 24 days before Karkata Sankranti.
Our Jagadguru Shri Kanchi Kamakoti Moolamnaya Sarvajna Peetadhipati Shankaracharya Swamigal traditionally does the anushthanam of Surya Puja on Uttarayana Punya Kala also before Makara Sankranti which is generally celebrated.
Let us worship Surya Bhagavan on such highly sacred days, involve ourselves in dharma karyas, become worthy recipients of the grace of Guru/Ishvara and progress. A laghu puja paddhati is being released in many lipis for this purpose.
Note: The upcoming Dakshinayana Punya Kala is triply special in that it is also a Bhanu Saptami and Patarka. We should certainly make good use of this very rare punya kala!
🙏 Jaya Jaya Shankara! Hara Hara Shankara! 🙏